×

காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா

மும்பை: ரகசியமாக காதலை வளர்த்து வந்த நாக சைதன்யா, சோபிதா துலிபாலா இப்போது அந்த ரகசியத்தை உடைத்துள்ளனர். இருவரும் சகஜமாக வெளியே செல்கிறார்கள். ஒன்றாக உலா வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். ஆரம்பத்தில் தங்களுக்குள் காதல் இல்லை என்பதுபோல் இவர்கள் மறுத்து வந்தனர். ஆனால், இப்போது மகாராஷ்டிரா மாநிலம் திபேஷ்வருக்கு ஜோடியாக சென்ற புகைப்படங்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், மலைகள் நிரம்பிய இந்த இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், அப்போது நாங்கள் சந்தேகப்பட்டது உண்மைதான். எப்போது திருமணம் என கேட்டு இந்த ஜோடியை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு இவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள்.

The post காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Naga Chaitanya ,Sobita ,Mumbai ,Sobita Tulibala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...