×

நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்

சென்னை: சிக்னேச்சர் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும் படம் ‘நிறம் மாறும் உலகில்’. அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி. இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் பிரிட்டோ. சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா. இசை- தேவ் பிரகாஷ்.

 

The post நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Signature Productions ,GS Cinema International ,Bharathiraja ,Natty ,Ryoraj ,Sandy ,Brito JP ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்