×

மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விநாயக் மகாதேவ் எனும் போலீஸ் அதிகாரியாக அஜித் குமார் நடித்த படம் ‘மங்காத்தா’. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதிலும் அஜித் குமாருக்காக யுவன் சங்கர் ராஜா போட்ட பி.ஜி.எம். இன்றும் பிரபலம். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து புது டிரெண்டை இப்படம் மூலம் உருவாக்கியிருந்தார் அஜித். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, லட்சுமி ராய், அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி உள்பட பலர் நடித்தனர்.

இப்படி அனைவரையும் கவர்ந்த ‘மங்காத்தா’ படத்தை அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்கிறார்கள். ‘மங்காத்தா’ படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் ‘கில்லி’ படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் கழித்து கடந்த 20ம் தேதி மீண்டும் ரிலீஸானது. படம் ரிலீஸான 3 நாளில் ரூ.10 கோடி வசூல் செய்தது. ‘மங்காத்தா’ படம் ‘கில்லி’யின் வசூல் சாதனையை முறியடிக்கும் என அஜித் குமார் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

The post மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Venkat Prabhu ,Ajith Kumar ,Vinayak Mahadev ,BGM ,Yuvan Shankar Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...