×

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ ஆம் கேம்’

‘ஆர்டிஎக்ஸ்’ என்ற படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதுப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஐ ஆம் கேம்’ என்று பெயரிட்டு, சில நாட்களுக்கு முன்பு துல்கர் சல்மானின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. சஜீர் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து கதை எழுதுகின்றனர். ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் வசனம் எழுதுகின்றனர்.

ஆக்‌ஷனுடன் கூடிய த்ரில்லர் கதை கொண்ட இது, துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாகும். முக்கிய வேடங்களில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கின்றனர். அன்பறிவ் சண்டைக்காட்சி அமைக்க, ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க, சமன் சக்கோ எடிட்டிங் செய்கிறார்.

Tags : Dulquer Salmaan ,Nahas Hidayat ,RTX ,Sajeer Baba ,Ismail Abubakar ,Bilal Moithu ,Adarsh Sukumaran ,Shahbaz Rashid ,Antony ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா