கடந்த 2016ல் வெளியான ‘முங்காரு மலே 2’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத். பிறகு மலையாளத்தில் ‘அட்வென்சர்ஸ் ஆஃப் ஓமனகுட்டன்’ என்ற படத்தில் நடித்த அவர், விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’, ‘பேரழகி ஐஎஸ்ஓ’, ‘தேவதாஸ் பிரதர்ஸ்’, ‘ஓணான்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். இந்த ஆண்டில் ‘முதல் பக்கம்’ என்ற படகில் நடித்திருந்த ஷில்பா மஞ்சுநாத், தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் விரைவில் வெளியாகிறது. மேலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஷில்பா மஞ்சுநாத், சமீபத்தில் புதிய போட்டோஷூட் செய்து, அந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற ஆடையணிந்து, கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து, ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளார்.
