தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர், பிரியங்கா மோகன். தமிழில் ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’, ‘கேப்டன் மில்லர்’, ‘பிரதர்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த அவர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தெலுங்கில் ‘காரம்’, ‘சரிபோதா சனிவாரம்’ உள்பட சில படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஓஜி’ என்ற தெலுங்கு படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார். தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அவருடைய ஏஐ தொழில்நுட்ப போட்டோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அவை அனைத்தும் போலியானவை என்று அவர் விளக்கம் அளித்தார். சமீபத்தில் அபுதாபிக்கு அவுட்டிங் சென்றிருந்த பிரியங்கா மோகன், அங்கு கடற்கரையில் எடுத்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பீச் உடைக்கு மேல் கோட் அணிந்துள்ளார். அதை பார்த்து பரவசம் அடைந்த நெட்டிசன்கள், முதல்முறையாக பிரியங்கா மோகன் பீச் உடையணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதாக சொல்லி, தங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
