×

பாலிவுட் படங்களை நிராகரித்து விட்டேன்: கிரித்தி ஷெட்டி

ஐதராபாத்: ‘உப்பெனா’ என்ற தெலுங்குப் படத்தில்  அறிமுகமான கிரித்தி ஷெட்டி, பிறகு ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘பங்கர்ராஜு’, ‘தி வாரியர்’ படங்களில்  நடித்தார். தமிழில் ‘தி வாரியர்’ படத்தின் மூலம் அறிமுக மான அவர், தற்போது பாலா இயக்கும் ‘வணங்கான்’ என்ற படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘மச்சர்ல நியோஜகவர்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: எனது முதல் தெலுங்கு படமான ‘உப்பெனா’வில் விஜய் சேதுபதி போன்ற பன்முகத்திறமை கொண்ட நடிகருடன்  இணைந்து நடித்தது பெருமையாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும்  இருந்தது. அதில் என் கேரக்டரை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்.

ஒவ்வொரு படத்தையும், அதில் என் கேரக்டர் வித்தியாசமாகவும், என் மனதுக்கும் பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சஜகம் என்பதை புரிந்து வைத்திருக்கிறேன். இந்தக் குறுகியகாலத்திலேயே வெற்றி, தோல்வி அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது. வெற்றிபெற்றால் மகிழ்ச்சி. தோல்வி அடைந்தால் வருத்தப்படுவதை விட்டுவிட்டு, அதை ஒரு சிறந்த அனுபவமாக எடுத்துக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். பாலிவுட்டில் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான்தான் அவற்றை நிராகரித்துவிட்டேன். தற்போது நான் தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிப்பதையே விரும்புகிறேன்.

Tags : Bollywood ,Kriti Shetty ,
× RELATED தொண்டு நிறுவனம் தொடங்கிய கிரித்தி ஷெட்டி