சென்னை: சமீபத்தில் வெளியான ‘பூங்கா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், கவுசிக். ‘வீரதேவன்’ என்ற படத்தில் அறிமுகமான அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘சரண்டர்’ என்ற படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் கூறியதாவது:
தற்போது ’எண்ணம் போல் வாழ்க்கை’, ‘புல் ஹெட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். படம் முழுக்க ஒரே கதாபாத்திரம் மட்டுமே வரும் ‘சாரன்’ என்ற படத்திலும் நடிக்கிறேன். ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பது எனது லட்சியம். சினிமாவில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் சார் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
