×

மோசமான 6 மாதங்கள்: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை, நவ.26: முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் இந்தியிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. அதே போல் ‘அக்கா’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது. தற்போது பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் இணைந்து தயாரிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘மகாநடி’ படம் குறித்து கீர்த்தி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘‘மகாநடி படத்திற்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு எனக்கு எந்தப் பட வாய்ப்பும் வரவில்லை. அந்த நேரத்தில் யாரும் என்னிடம் கதை கூட சொல்லவில்லை. இது வருத்தமாக இருந்தது. அது மோசமான காலம். அதே சமயம், நான் தவறாக எதுவும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. இயக்குனர்கள் எனக்காக ஒரு சிறந்த கதாபாத்திரத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று நான் நினைத்தேன். அதை நான் நேர்மறையாகப் பயன்படுத்திக்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kirti Suresh ,Chennai ,South India ,India ,Fashion Studios ,The Root ,
× RELATED பைக் சாகசம் வியக்க வைத்த நடிகை பார்வதி