×

ராஷ்மிகாவின் மைசா டீசர் வெளியீடு

ஐதராபாத்: ராஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் நடிக்கும் படம், ‘மைசா’. ரவீந்திர புல்லே இயக்குகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் படமான இதை அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. பான் இந்தியா படமான இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மைசா என்ற பெண்ணை, மிகவும் வலிமையான கோண்ட் பழங்குடியின பெண்ணாக சித்தரிக்கிறது. ஸ்ரேயாஸ் பி.கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். ஆண்டி லாங் சண்டை பயிற்சி அளிக்கிறார். தெலங்கானா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

Tags : Rashmika ,Hyderabad ,Rashmika Mandanna ,Easwari Rao ,Guru Somasundaram ,Rao Ramesh ,Ravindra Pulle ,Unformula Films ,India ,Maisa ,Shreyas P. Krishna ,Jakes Bejoy ,Andy Lang ,Telangana ,
× RELATED கவர்ச்சி உடை விமர்சனம்: நடிகை நிதி அகர்வால் பதிலடி