×

பைக் சாகசம் வியக்க வைத்த நடிகை பார்வதி

சென்னை: பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வரும் பார்வதி திருவோத்து, தனது 2025ம் வருடம் எப்படி கடந்தது என்பதை சொல்ல, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்வதும், அப்படி ஓட்டும்போதே எழுந்து நின்றபடி சாகசம் செய்வதும் வியக்க வைத்துள்ளது. இதுபற்றி பார்வதி திருவோத்து கூறுகையில், ‘பைக்கர்ஸ் ஆக விரும்பும் பெண்களை, அவர்களது கனவை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கும் சிஆர்எஃப் உமன் ஆஃப் வீல்ஸ் அமைப்பின் பெருந்தன்மைக்கு நன்றி’ என்றார்.

Tags : Parvati ,Chennai ,Parvathi Thiruvothu ,Parvati Thiruvothu ,
× RELATED கவர்ச்சி உடை விமர்சனம்: நடிகை நிதி அகர்வால் பதிலடி