- சென்னை
- ஆர்.எம்.வீரப்பன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சத்யா மூவிஸ்
- கோல்டன் கிங் ஸ்டுடியோஸ்
- ஆர்எம்வி
- வீரப்பன்
- தங்கராஜ் வீரப்பன்
- பின் சுப்பிரமணியம்
சென்னை: ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை சம்பவங்கள், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் விதமாக, ‘ஆர்எம்வீ தி கிங்மேக்கர்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இது விரைவில் வெளியாகிறது. அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்று தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சத்யா மூவிஸ், தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன், தனது தந்தை குறித்து பேசியுள்ளார். பினு சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். ஆவணப்படத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த், ஆர்.கண்ணன், சரத்குமார், சத்யராஜ், வைரமுத்து, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட பலர், ஆர்.எம்.வீரப்பன் குறித்து தங்கள் கருத்துகளை விரிவாக பேசி பதிவு செய்துள்ளனர்.

