×

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நவம்பர் 25ம் தேதி ரிலீஸ்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்கில் நவீன் பொலி ஷெட்டி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான ‘ஏஜென்ட் சாய் நிவாசா ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் டைரக்டர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்.

இதில் சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனீஸ்காந்த் நடித்துள்ளனர். இப்படத்தின் ‘ஒப்பாரி ரேப்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அம்மாவை இழந்த மனிதனின் கண்ணோட்டத்தில் உருவாகியுள்ள இப்பாடல் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

Tags :
× RELATED ஒடிடிக்கு வருகிறது சுந்தர்.சியி. 'காஃபி வித் காதல்’