×

குமரிக்கண்டத்தில் நடக்கும் கதை த்ரிகண்டா

சென்னை: எஸ்விஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள படம், ‘த்ரிகண்டா’. மணி தெலக்குட்டி இயக்கியுள்ளார். மாஸ்டர் மகேந்திரன், ஸ்ரத்தா தாஸ், சாஹிதி அவான்சா, ‘கல்லூரி’ வினோத், மாஸ்டர் சஞ்சய் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், ஷாஜித் இசை அமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீசாகிறது. படம் குறித்து மணி தெலக்குட்டி கூறுகையில், ‘குமரிக்கண்டத்தில் இக்கதை நடப்பது போல் புனைவுக்கதையாக உருவாக்கியுள்ளேன்’ என்றார். சாஹிதி அவான்ஷா கூறும் போது, ‘தமிழ் சினிமாதான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’ என்றார்.

பிறகு மாஸ்டர் மகேந்திரன் கூறுகையில், ‘தெலுங்கில் ‘மாஸ்டர்’ படம் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ‘த்ரிகண்டா’ என்ற படம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. ‘நாட்டாமை’ படப்பிடிப்பில் இயக்கு னர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று பெயர் சூட்டினார். இன்னும் எத்தனை காலத்துக்குதான் ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்ற பெயரே தொடரும் என்று நினைத்தேன். அப்போது லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியினரின் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிஎனது பெயரை ‘மகேந்திரன்’ என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்’ என்றார்.

Tags : Kumarikandam ,Chennai ,Radhika Srinivas ,SVM Studios ,Mani Thelakutty ,Master Mahendran ,Shraddha Das ,Sahithi Awansha ,Kalluri' Vinoth ,Master Sanjay ,Harshavardhan Rameshwar ,Shajith ,
× RELATED கவர்ச்சி உடை விமர்சனம்: நடிகை நிதி அகர்வால் பதிலடி