×

கடின உழைப்பு மட்டுமே ஜெயிக்கும்: பாக்யஸ்ரீ போர்ஸ்

ஐதராபாத்: கடந்த 14ம் தேதி ரிலீசான படம், ‘காந்தா’. இதில் குமாரி என்ற கேரக்டரில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ், பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அவர் கூறுகையில், ‘நான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்த குமாரி கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைத்தேன். பிறகு ஒருகட்டத்தில் சிலர் என்னை தேடி வந்து, ‘யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு பணிகளை செய்து நாங்கள் பார்க்கவில்லை’ என்று சொன்னார்கள். அந்த பாராட்டு வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.

என்னை பொறுத்தவரையில், என் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும், தளமும் கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதுவே இப்போது படம் வெளியான பிறகு எனக்கான பாராட்டுகளாக மாறியுள்ளது. பல்வேறு தரப்பு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் மட்டுமே நம்மை ஜெயிக்க வைத்து, நல்ல இடங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.

Tags : Bhagyashree Force ,Hyderabad ,Kumari ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா