×

நேஷனல் கிரஷ் பட்டம் யாருக்கு?

சென்னை: இந்திய திரையுலகை பொறுத்தவரை, சில முன்னணி ஹீரோயின்களுக்கு இடையே ‘நேஷனல் கிரஷ்’ என்ற பட்டம் யாருக்கு என்பது கேள்விக்குறியாகி விட்டது. நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றார் கள். 9 படங்களை கைவசம் வைத்துள்ள அவர், குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகாததை நினைத்து வேதனைப்பட்டு, ‘இனிமேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.

‘நேஷனல் கிரஷ்’ என்று புகழப்பட்ட ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அவரது மார்க்கெட் நிலவரம் சரிந்துவிட்டது. அவருக்கு சரியான போட்டியாக இருப்பார் என்று சொல்லப்பட்ட ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோருக்கும் மார்க்கெட் நிலவரம் சரியில்லை.

பல படங்களில் நடித்து வந்தாலும், சில ஹிட்டுகள் கொடுத்தாலும் கூட, இன்னும் அவர்களால் ‘நம்பர் ஒன்’ என்ற அந்தஸ்துக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை பின்னுக்கு தள்ளிவிடுவார் என்று சொல்லப்பட்ட கயாடு லோஹர், ‘டிராகன்’ ஹிட்டுக்கு பிறகு ‘நேஷனல் கிரஷ்’ என்று புகழப்பட்டார்.

சோஷியல் மீடியா வில் தன்னை பற்றி பில்டப் செய்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட பணம் கொடுத்து ஒரு டீமை உருவாக்கினார் என்றாலும், இதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது ‘காந்தாரா 2’ ருக்மணி வசந்த், ‘காந்தா’ பாக்யஸ்ரீ போர்சுக்கு இடையே, யார் ‘நேஷனல் கிரஷ்’ என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Nayanthara ,Lady ,Rashmika Mandanna ,Vijay Deverakonda ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா