×

தீயவர் குலை நடுங்க: விமர்சனம்

எழுத்தாளர் லோகு மர்ம நபரால் கொல்லப்பட்ட வழக்கை போலீஸ் அதிகாரி அர்ஜூன் விசாரிக்கும்போது, லோகுவின் நண்பர் கட்டுமான தொழிலதிபர் ராம்குமார் கணேசன் கொல்லப்படுகிறார். தொடர் கொலைகள் நடக்க, அர்ஜுன், கொலைக்கான காரணத்தை அறிந்து எதிர்பாராத முடிவை எடுக்கிறார். அது என்ன, நடந்த குற்றம் என்ன, மர்ம நபர் யார் என்பது மீதி கதை. போலீஸ் அதிகாரிக்கான மிடுக்குடன் புலன் விசாரணையில் ஈடுபட்டு, ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற பட்டத்துக்கு நியாயம் செய்துள்ளார் அர்ஜுன். ஆட்டிஸம் பாதித்த சிறுவர், சிறுமியர் காப்பகத்தில் பூ போல் அமைதியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிறகு புயலாக மாறுவது எதிர்பாராதது. சுனாமி போல் ஆக்‌ஷனில் சுழன்றடித்து எதிரிகளை பந்தாடியிருக்கிறார்.

பிரவீன் ராஜா, ராம்குமார் கணேசன், வேல.ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, லோகு, தங்கதுரை, பிராங்ஸ்டர் ராகுல், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் கேரக்டருக்கு ஏற்ப நடித்துள்ளனர். 12 வயது ஸ்பெஷல் சைல்டாக வரும் பேபி அனிகாவின் நடிப்பு நெஞ்சை உலுக்குகிறது. இசையை பரத் ஆசிவகன் பரபரப்பாக வழங்கியுள்ளார். சில காட்சிகளில் அவரது இசை, வசனங்களை கேட்க விடாமல் செய்ததை கவனித்திருக்கலாம். சரவணன் அபிமன்யுவின் கேமரா கோணங்கள் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. படம் மூலம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் இயக்குனர் தினேஷ் இலெட்சுமணனுக்கு பாராட்டு. அடுத்தடுத்த காட்சியை கணிக்க முடிவது பலவீனம்.

Tags : Arjun ,Loku ,Ramkumar Ganesan ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா