×

8 மணி நேர வேலைதான் வேண்டும்: கீர்த்தி சுரேஷும் கேட்கிறார்

சென்னை: தீபிகா படுகோன், ராஷ்மிகாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் தயாரிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வரும் 28ம் தேதி ரிலீசாகிறது. இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் கூறியது: இயக்குனர் சந்துரு சொன்ன கதை பிடித்ததால் இதில் நடிக்கிறேன். இது டார்க் காமெடி படம். ஒரு பிரச்னையில் சிக்கும் குடும்பம் அதிலிருந்து எப்படி மீள்கிறது என்பதுதான் கதை. இதில் எனது அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. சுதன் சுந்தரம், ஜெகன் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது நடிகைகளிடம் 8 மணி நேர வேலை தொடர்பான ஆதரவு பெருகி வருகிறது. நடிகைகள் மட்டுமின்றி, லைட்மேன் வரை அனைவருக்குமே இது பொருந்தும்.

8 மணி நேரம் நாங்கள் வேலை செய்த பிறகு இரவு 7 மணிக்குதான் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்புகிறோம். வீட்டுக்கோ ஓட்டல் அறைக்கோ செல்ல 8 மணி அல்லது 9 மணி ஆகிவிடும். பிறகு ஜிம் ஒர்க் அவுட், உணவு சாப்பிடுவது என முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் தூங்கவே முடியும். மீண்டும் அதிகாலையில் படப்பிடிப்புக்காக எழுந்து கொள்ள வேண்டும். மலையாள சினிமாவில் 12 மணி ேநர வேலை என்பது கட்டாயம். காரணம், அங்கு படத்தின் பட்ஜெட், குறுகிய கால படப்பிடிப்பு போன்ற விஷயங்கள் உள்ளது. அதுபோல் 12 மணி நேரம் வேலை செய்யவும் நான் தயார்தான். ஆனால் உடல் நலனுக்காக 8 மணி நேர வேலைதான் கம்ஃபர்ட் ஜோன் ஆக இருக்கிறது. இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Tags : Keerthy Suresh ,Chennai ,Deepika Padukone ,Rashmika ,Fashion Studios ,The Root ,Chandru ,Radhika ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா