×

வெளிநாட்டு வானொலியில் இணைந்த சந்திரிகா

ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்னில் பிறந்த சந்திரிகா ரவி, தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘செய்’, ‘பிளாக்மெயில்’ ஆகிய படங்களில் நடித்தார். தவிர, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சாம் ஆண்டன் இயக்கும் ‘அன்கில்_123’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் அனுராக் காஷ்யப், சங்கீதா கிரிஷ் நடிக்கின்றனர். இதையடுத்து மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘சில்க் ஸ்மிதா: குயின் ஆஃப் தி சவுத்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

அமெரிக்காவில், ஐஹார்ட் ரேடியோ மற்றும் ருகுஸ் அவென்யூ ரேடியோ பண்பலை வானொலியுடன் இணைந்து ‘தி சந்திரிகா ரவி ஷோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இதன் 2வது சீசனை தொடங்கினார். இதுகுறித்து அவரது தரப்பில் கூறுகையில், ‘பொழுதுபோக்கு துறைகளை கடந்து வந்து பாலின சமத்துவம், மனநலம், குழந்தைகள் நலன், நிற வேற்றுமை உள்பட பல்வேறு விஷயங்களில் சந்திரிகா ரவி தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

யுனிசெஃப் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றுகிறார். மேலும், சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் வலுவான கதை கொண்ட படங்களில் பணியாற்ற காத்திருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியாக நடிப்பதில் தயக்கம் காட்டாத சந்திரிகா ரவி, தமிழிலும் சரளமாக பேசுகிறார். உலக அளவில் பிரபலமான மாடலாக இருப்பதால், அவர் பல்வேறு மொழிகளை தெரிந்து வைத்திருக்கிறார்.

Tags : Chandrika ,Chandrika Ravi ,Melbourne, Australia ,Sam Anton ,Anurag Kashyap ,Sangeeta Girish ,Silk Smitha ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்