×

ஆண்பாவம் பொல்லாதது விமர்சனம்…

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இருவரும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த பிறகு காதலிக்கின்றனர். சில நாட்களிலேயே மனைவியின் முற்போக்கான அணுகுமுறைகளை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் ரியோ ராஜ் அதையெல்லாம் தட்டிக்கேட்கிறார். இதனால் எழும் ஈகோ மோதல், அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. இதன் விளைவை சொல்கிறது படம்.

முழுநீள பேமிலி சென்டிமெண்ட் படத்துக்கு ஏற்ப ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் ஜோடியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மனைவிக்காக உருகுவது, ஈகோ யுத்தத்தில் வெடிப்பது, விவாகரத்துக்கு சம்மதிப்பது என்று, தனக்கான களத்தில் ரியோ ராஜ் புகுந்து விளையாடியுள்ளார். ‘ஜூனியர் சாய் பல்லவி’ என்று சொல்லும் அளவுக்கு மாளவிகா மனோஜ் சிறப்பாக நடித்துள்ளார்.

கணவன், மனைவியின் ஈகோ மோதலை பேலன்ஸ் செய்து, பொய் சொல்லியே வழக்கில் ஜெயித்துவிட வேண்டும் என்று கோர்ட்டில் மோதும் முன்னாள் தம்பதிகள் ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஷீலா ஜோடி கவனத்தை ஈர்க்கிறது. ஜென்சன் திவாகரின் காமெடி குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. அனுபமா குமார், ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், இளங்கோ குமணன், திருநங்கை நீதிபதி யதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் காட்சிகளை இயல்பாக படமாக்கியுள்ளார். சித்து குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை உயிரூட்டுகிறது. திருமண உறவிலான சிக்கல்களில் ஈகோ ஏற்பட்டால், அது குணப்படுத்த முடியாத நோயாக மாறிவிடும் என்பதை முன்வைத்த இயக்குனர் கலையரசன் தங்கவேல், கிளைமாக்சை எளிதில் கணிக்க முடிவதை மாற்றி யோசித்திருக்கலாம். ஆணாதிக்கம், பெண்ணியம் போன்ற உரையாடல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

Tags : Rio Raj ,Malavika Manoj ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா