×

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படம்

சென்னை: கருணாஸ், கிரேஸ் தம்பதியின் மகன் கென் கருணாஸ், கதையின் நாயகனாக நடித்து, ஸ்கிரிப்ட் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், கென் கருணாஸ். முக்கிய வேடங்களில் அனிஸ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி நடிக்கின்றனர்.

விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நாஷ் எடிட்டிங் செய்ய, ராமு தங்கராஜ் அரங்கம் அமைக்கிறார். பள்ளி பின்னணியில் உருவாகும் இப்படத்தை பார்வதா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ சார்பில் கருப்பையா சி.ராம், காளி ராஜ்குமார், சுலோசனா குமார் தயாரிக்கின்றனர்.

Tags : Ken Karunas ,Chennai ,Karunas ,Grace ,Anisma Anil Kumar ,Meenakshi Dinesh ,Priyanshi Yadav ,Suraj Vencharmoodu ,Devadarshini ,Vicky ,G. V. Prakash Kumar ,Nash ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா