- சென்னை
- தீரன் அருண் குமார்
- எம். மூர்த்தி
- எம்.எம். ஸ்டுடியோஸ்
- வெற்றி
- பிரியாலய
- லிவிங்ஸ்டன்
- துளசி
- அபிராமி
- ஏ. வெங்கடேஷ்
- அருல் டி. சங்கர்
- ராமர்
சென்னை: எம்.எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில், ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ தீரன் அருண் குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘பிளாக் கோல்டு’. இதில் ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ உள்பட பல படங்களில் நடித்துள்ள வெற்றி ஹீரோவாகவும், பிரியாலயா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தயாரிப்பாளர் எம்.மூர்த்தி, லிவிங்ஸ்டன், துளசி, அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி.சங்கர், ராமர் நடித்துள்ளனர். ஒரு இளைஞனுக்கும், மிகப்பெரிய வணிக மாஃபியாக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை.
படம் குறித்து எம்.மூர்த்தி கூறுகையில், ‘ஒரு நடிகராகத்தான் இப்படத்திற்குள் வந்தேன். இக்கதை எனக்கு மிகவும் பிடித்ததால், பிறகு நானே தயாரிப்பாளரானேன். தமிழ் படவுலகில் இதுவரை இடம்பெறாத புதிய கதைக்களம் கொண்ட இதில் நான் காவல் அதிகாரியாக நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு நிறைய ஆச்சரி யங்கள் காத்திருக்கிறது. முற்றிலும் புது அனுபவமாக இருக்கும். பர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என்றார்.
