×

ஆஸ்கர் விருது விழா தள்ளிவைப்பு

உலக திரைப்பட விருது விழாக்களில் முதன்மையானது ஆஸ்கர் திரைப்பட விழா. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இந்த விருது விழா நடக்கும். 93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 28ம் தேதி விழா நிறுத்தப்படுவதாகவும், 2021ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி விழா நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா தள்ளி வைக்கப்படுவதால் விருதுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவும் 2021 பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Oscar Award Ceremony ,
× RELATED பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான்...