×

பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான் சினா, ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடைக்கு ஆடையின்றி வந்ததால் பரபரப்பு!!

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான் சினா, ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடைக்கு ஆடையின்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதினை அறிவிக்க பிரபல அதிரடி நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான ஜான் சினாவை, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் மேடைக்கு அழைத்தார்.

இதையடுத்து விருது பெற்றவரின் விவரம் அடங்கிய அட்டையை வைத்து உடலை மறைத்தபடி ஆடையின்றி சினா மேடையில் தோன்றினார். எதிர்பாராத இந்த நிகழ்வால் ஆஸ்கர் விழா மேடையில் பரபரப்பு நிலவியது. பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் கொண்டு வந்த திரைசீலையை மேடையிலேயே அணிந்து கொண்ட நடிகர் ஜான் சினா, நிகழ்ச்சியில் பேசினார். ஆஸ்கர் திரைப்படங்களில் ஆடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே வேடிக்கைக்காக தாம் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறிய சினா, தொடர்ந்து, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்கினார்.

The post பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான் சினா, ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடைக்கு ஆடையின்றி வந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Hollywood ,John Cena ,Oscar award ceremony ,Los Angeles ,96th Oscar ceremony ,Los Angeles, USA ,Dinakaran ,
× RELATED தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ்