×

விபத்தால் பேச முடியாமல் சிரமப்பட்ேடன்: சாய் துர்கா தேஜ் உருக்கம்

 

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த ‘தி ஃபாஸ்ட் அன்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025’ என்ற நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ் ரசிகர்களுடன் பேசினார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘தயவுசெய்து அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வண்டியை வேகமாக
ஓட்டாமல், மிகவும் பாதுகாப்பாக ஓட்டுங்கள்’ என்ற அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய ஒரு விபத்து குறித்து உருக்க மாக பேசியதாவது: திடீர் விபத்துக்கு பிறகு நிறைய சவால்கள் ஏற்பட்டது. என்னால் சரியாக பேச முடியாமல் சிரமப்பட்டேன். தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, பயனுள்ள புத்தகங்கள் படித்தேன்.

பாதுகாப்புதான் முக்கியமானது. சினிமாவில் ஆரம்ப காலத்தில் எனது புரொபைலை எடுத்துக்கொண்டு பல ஆபீசுகளுக்கு சென்றேன். சிலர் என் போட்டோவை பயன்படுத்தி நிலக்கடலை சாப்பிட்டனர். மனோஜ் மன்ச்சு ஆபீசில் இருந்தபோது, வைகுண்டம் யு.வி.எஸ்.சவுத்ரி என்னை தேர்வு செய்தார். இப்படித்தான் ‘ரே’ படம் தொடங்கியது.

பவன் கல்யாண் எனக்கு ஒரு குரு. என் சிறுவயது முதல் நடிப்பு, நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ், கிக் பாக்சிங் போன்ற
வற்றில் வழிகாட்டியாக இருந்தார். எனக்கு ஒரு விபத்து நடந்தபோது, ‘நான் கோமாவில் இருந்தேன்’ என்று சொல்லவில்லை. ‘ஹாஸ்பிட்டலில் நான்் ரிலாக்ஸாக இருந்துள்ளேன்’ என்றுதான் சொல்லி இருந்தேன்.

 

Tags : Sai Durga Tej ,Hyderabad ,The Fast and Curious – The Auto Expo 2025 ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா