×

அரசன் ஆகும் சிலம்பரசன்

சென்னை: சிலம்பரசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அரசன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

திரையுலகில் சாதனையாளர்களாக வலம் வரும் இயக்குனர் வெற்றிமாறன் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் ரசிகர்களின் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்ற சிலம்பரசன் டி.ஆருடன் இணைந்து புது படைப்பை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Silambarasan ,Chennai ,Kalaipuli S Thanu ,Vetrimaaran ,Arasan ,Kalaipuli S. Thanu ,Silambarasan T.R. ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி