×

நயன்தாராவின் வில்லன்

நானும் ரவுடிதான் இயக்குனரும், நயன்தாராவின் காதலனுமான விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மிலிந்த் ராவ் இயக்குகிறார். கிரிஷ் இசை அமைக்கிறார். இப்படம் டிராப் ஆகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன் வதந்தி பரவியது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் 80 சதவீத நடந்து முடிந்துள்ளது. தற்போது நயன்தாராவுக்கு வில்லனாக அஜ்மல் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர் ஏற்கனவே கோ, அஞ்சாதே படங்களில் நடித்திருக்கிறார். த்ரில், மர்மம் நிறைந்த படமாக உருவாகிறது நெற்றிக்கண்.

Tags : villain ,Nayanthara ,
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது