×

நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது

சென்னை: நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது. CAIB 2023 விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படம் ஒன்று. இப்படத்தில் புதுமுகங்கள் நடித்திருந்தனர். பிஎஸ்.வினோத்ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. அதேபோல் சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கிய படம் ‘அயோத்தி’.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்படம் உருவானது. இந்த படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது. விழாவில் விருதுகள் வழங்கி பேசிய நடிகர் ஜிஎம். சுந்தர், ‘அயோத்தி, கூழாங்கல் இரண்டுமே உலகத்தரத்திற்கு உள்ள திரைப்படங்கள். இப்படங்கள் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் என்பது பெருமையான விஷயமாகும்’ என்றார்.

The post நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Nayanthara ,Chennai ,CAIB 2023 Awards Ceremony ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்