திரிஷா வாய்ப்பை கைப்பற்றிய காஜல்

நடிகை திரிஷா தமிழில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில்தான் சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா தெலுங்கு படத்தில் நடிக்க  ஒப்புக்கொண்டார். முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றவர் அன்று மாலையே பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினார்.

இதுபற்றி திரிஷா தரப்பில் கூறும்போது, ’பட தரப்பினர் முதலில் என்னிடம் எப்படி சொன்னார்களோ அப்படி படப்பிடிப்பை நடத்தாமல் காட்சிகளை மாற்றி தங்கள் இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். அதுபற்றி என்னிடம் தெரிவிக் கவும் இல்லை’ என்றார். இந்நிலையில் சிரஞ்சீவி படத்தில் கூடுதலாக மற்றொரு ஹீரோ நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் தேர்வாகியிருக்கிறாராம்.

மற்றொரு நடிகையும் படத்தில் இணைய உள்ளதால் தனக்கு முக்கியத்துவம் இருக்காது என்ற எண்ணத்தில் திரிஷா விலகியதாக தெரிகிறது. இதையடுத்து திரிஷாவுக்கு பதில் தமன்னா, காஜல் ஆகிய ஹீரோயின்களிடம் பேசப்பட்டு வந்தது. இருவருமே அதிக சம்பளம் கேட்டனர். அவர்களிடம் பட தரப்பிலிருந்து பேசப்பட்டது. இதில் காஜல் நடிக்க சம்மதிக்க, அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தர முடிவானதாம்.

Related Stories:

>