×

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் நடித்திருக்கும் அதர்ஸ் படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகும்

 

சென்னை: கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ராமர் மேற்கொண்டுள்ளார். பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags : Grand Pictures' ,Aditya Madhavan ,Gauri Kishan ,Anju Kurian ,Abin Hariharan ,Arvind Singh ,Ghibran ,Ramar ,Pradeep ,Santhosh ,Mundasubatti' Ramadoss ,Nandu' Jagan ,Harish Perodi ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி