சென்னை: தெலுங்கில் முன்னணி நடிகை என்றாலும் தமிழில் என்ட்ரி ஆகி, இங்கே வெற்றி கொடுக்க முயல்கிறார் கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் இவர் நடித்த ‘கஸ்டடி’, ‘வாரியர்’ படங்கள் தமிழில் டப் ஆனாலும் இங்கே ஓடவில்லை. இந்நிலையில் கிரித்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார், ‘எல் ஐ கே’ படங்கள் இந்த மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் வழக்கு பிரச்னை காரணமாக கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ ரிலீஸ் ஆகவில்லை.
கடந்த சில நாட்களாக இப்படம் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றும் பலனில்லையே என கிரித்தி ஷெட்டி வருத்தப்படுகிறார். அதேபோல் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘எல் ஐ கே’ படமும் இந்த மாதம் ரிலீஸ் ஆகவில்லை. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தார் கிரித்தி ஷெட்டி.
