×

தயாரிப்பாளர் இயக்கத்தில் சிம்ரன் ராஜ்

திரைக்கு வந்த ‘லாரா’ என்ற படத்தை தயாரித்து நடித்த கார்த்திகேசன், தற்போது இயக்குனராக அறிமுகமாகி, முக்கிய வேடத்தில் நடித்து தயாரிக்கும் படம், ‘அறுவடை’. கோவை, கோபிசெட்டிபாளையம், பவானி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோயினாக ‘உழவர் மகன்’ சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், தீபா பாஸ்கர் நடிக்கின்றனர். ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவன் குமார் இசை அமைக்கிறார். கே.கே.விக்னேஷ் எடிட்டிங் செய்ய, டி.கே சண்டைப் பயிற்சி அளிக்கிறார். கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி பாடல்கள் எழுதுகின்றனர். ஏ.எம்.ஜே.முருகன் நடனப் பயிற்சி அளிக்கிறார். கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும் இப்படம் சொல்கிறது.

Tags : Simran Raj ,Karthikesan ,Coimbatore ,Gopichettipalayam ,Bhavani ,Pollachi ,Uzhavaar Magan ,Paruthiveeran' Saravanan ,Rajasimman ,Gajaraj ,Deepa Bhaskar ,Anand ,Raghu Shravan Kumar ,K.K. Vignesh ,D.K. ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா