×

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு அண்ணாத்த என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார்.

இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. படத்துக்கு அண்ணாத்த என தலைப்பு வைத்துள்ளனர்.

எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு நேற்று வெளியானதும், இந்த தலைப்பு ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் மாஸாக இருப்பதாக இணையதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டினர். ‘அண்ணாத்த’ தலைப்பு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...