- கார்மெனி செல்வம்
- தீபாவளி
- சென்னை
- அருண் ரங்கராஜுலு
- பாத்வே புரொடக்ஷன்ஸ்
- குறையோதமில்லை
- ராம் சக்ரி
- லட்சுமி பிரியா சந்திரமௌலி
- கௌதம் வாசுதேவ் மேனன்
- யுவராஜ் தக்ஷன்
- ராமானுஜன் எம்.கே.
- செல்வம்
சென்னை: பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள படம், ‘கார்மேனி செல்வம்’. இதை ‘குறையொன்றுமில்லை’ ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக ‘நாடோடிகள்’ அபிநயா நடித்துள்ளனர். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்ய, ராமானுஜன் எம்.கே இசை அமைத்துள்ளார். படம் குறித்து ராம் சக்ரி கூறியதாவது:
கடமைக்கும், ஆசைக்குமான இடைவெளியையும் மற்றும் நேர்மைக்கும், விரக்திக்குமான இடைவெளியையும் இப்படம் ஆராய்கிறது. செல்வம் என்ற நேர்மையான கார் ஓட்டுநரை பற்றிய இக்கதையில், திடீரென்று ஏற்படும் அவரது குடும்பத்தின் அவசர நிலை, அவரை எந்த எல்லைக்கு தள்ளுகிறது என்பதை சொல்லியிருக்கிறேன். சாதாரண மக்களின் ஆசைகள் மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு பிரேமும், வசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் கொண்டாட வேண்டிய கதை என்பதால், வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளியன்று படத்தை வெளியிடுகிறோம்.
