×

ரஜினியின் ‘சந்திரமுகி 2’ டிராப்

ரஜினிகாந்த், பிரபு நடிக்க பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. இது சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்திரமுகி 2ம் பாகம் இயக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அவர் தற்போது ரஜினியின் தர்பார் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இதுபற்றி முருகதாஸ் கூறும்போது, ’தர்பார் படத்தில் அரசியல் கிடையாது. ரஜினி இதில் அரசியல் பேசவில்லை. அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா ஒரு ஆர்கிடெக்காக வேடம் ஏற்றிருக்கிறார். சந்திரமுகி 2 இயக்குவீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கான ஸ்கிரிப்ட் தயாரித்து ரஜினியிடம் சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சில தடைகள் இருந்ததால் அந்த திட்டத்தை டிராப் செய்ய வேண்டியதாகிவிட்டது’ என்றார்.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...