×

வரும் 26ம் தேதி ரிலீசாகும் பனை

 

சென்னை: கோயில் அர்ச்சகரின் மகள், பனை தொழிலில் ஈடுபடும் இளைஞனை ஒருதலையாக காதலிப்பதால் ஏற்படும் சம்பவங்களை பற்றி சொல்லும் படம், ‘பனை’. இதை ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் எழுதி தயாரித்து வில்லனாக நடித்துள்ளார். ஹரீஷ் பிரபாகரன், மேக்னா ஜோடியுடன் வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டிஎஸ்ஆர், ரிஷா, ஜேக்கப் நடித்துள்ளனர்.

சிவகுமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். தினா நடனப் பயிற்சி அளிக்க, ஜெ.பிரபாகரன் இணை தயாரிப்பு செய்துள்ளார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கி இருக்கிறார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில், வரும் 26ம் தேதி வி.ஜெனிஷ் ரிலீஸ் செய்கிறார்.

 

Tags : M. Rajendran ,AMR Creations ,Harish Prabhakaran ,Meghna ,Vadivukkarasi ,Anupama Kumar ,Kanja Karuppu ,Iman Annachi ,DSR ,Risha ,Jacob ,Sivakumar Rangasamy ,Meera Lal ,Vairamuthu ,Dina ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...