×

‘காந்தாரா: சாப்டர் 1’: படத்துக்கு திடீர் சிக்கல்

கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்தின் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு திட்டமிட்டபடி படம் திரைக்கு வராது என்று சொல்லப்படுகிறது. ‘காந்தாரா’ என்ற படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கேரளாவில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இதர மொழிகளில் படங்களை வெளியிடும்போது, பங்கு தொகை 50 சதவீதம் மட்டுமே என்ற விதி இருக்கிறது.

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு 55 சதவீத பங்கு தொகை வேண்டும் என்று பிருத்விராஜ் சுகுமாரன் தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. இதனால் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, இப்படம் கேரளாவில் திட்டமிட்டபடி வெளியாகாது என்று சொல்லப்படுகிறது. இப்பிரச்னையில் ஹோம்பாலே பிலிம்ஸ் நேரடியாக தலையிட்டு பேசினால் மட்டுமே சுமூக முடிவு ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால், பிருத்விராஜ் சுகுமாரன் நிறுவனத்திடம் விநியோக உரிமை கொடுக்கப்பட்டதால், அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கும் என்பது விரைவில் தெரிய வரும்.

Tags : Kerala ,Rishabh Shetty ,India ,Prithviraj Sukumaran ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா