2018ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிறகு இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் தனது பிரமாதமான நடிப்பால் பலரது பாராட்டை பெற்றார்.தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், மீனாட்சி சவுத்ரி நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ‘இச்சாடா வாஹனமுலு நிலுபரடு’ என்ற தெலுங்கு படத்தில் சுஷாந்த் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு பின்னாளில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. சுஷாந்த் – மீனாட்சி சவுத்ரி இருவரும் அடிக்கடி அவுட்டிங் சென்று வருகின்றனர். இதன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சமீபத்தில் இருவரும் விமான நிலையத்தில் ஒன்றாக காணப்பட்டனர்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மீனாட்சி சவுத்ரி முகத்தை மூடியபடி செல்கிறார், சுஷாந்த் டிராலியை தள்ளிக்கொண்டு செல்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோ மூலம் இருவரது காதல் நிரூபணமானது என பதிவிட்டு வருகின்றனர்.
