- சுசீந்திரன்
- கனவு திருவிழா
- சென்னை
- லிங்கம்
- சாரா ஆச்சர்
- வாத்திகுச்சி திலீபன்
- Radaravi
- சை தினா
- சாரா
- வைபுரி
- சரத் ரவி
- அர்ஜய்
- சரத் வலயபதி
- பிரெண்டன் சுஷாந்த்
- ராகேஷ் அம்பிகாபதி
- அருண் பாரதி
- டேர்ம் புரொடக்ஷன்
- உமா மகேஸ்வரி
- பிரஷாந்த் ராமன்
சென்னை, செப்.4: லிங்கா ஹீரோவாக நடித்துள்ள படம், ‘தாவுத்’. மற்றும் சாரா ஆச்சர், ‘வத்திக்குச்சி’ திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், நடித்துள்ளனர். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்கேஷ் அம்பிகாபதி இசை அமைக்க, அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார். டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார். பிரசாந்த் ராமன் எழுதி இயக்கியுள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், ‘‘டார்க் ஹியூமரில் படத்தை உருவாக்கியுள்ளனர். லிங்கா ஹீரோவாக ஜெயிக்க வாழ்த்துகள். 100வது பாடல் எழுதிய அருண் பாரதிக்கு வாழ்த்துகள். கன்டென்ட் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. படம் ஜெயிக்கும்’ என்றார். ஹீரோ லிங்கா பேசுகையில், ‘படத்தில் நடிக்கும் அனைவருமே லீட்தான் என்றார்கள். இயக்குனர் அனைவரிடமும் நீங்கள்தான் கதாநாயகன் என்று சொல்லியிருக்கிறார் ேபால. அதற்கு பிறகு நான் லீட் என்று சொல்வதை நிறுத்தி விட்டேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது. இதில் எல்லோருக்குமே லீட் மாதிரியான கேரக்டர்தான்’ என்றார்.
