×

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன்

சென்னை: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படம் ‘பூக்கி’. அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்குகிறார். ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குனர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி, இசையமைக்கிறார்.

Tags : Vijay Antony ,Ajay Dishan ,Chennai ,Fatima Vijay Antony ,Vijay Antony Film Corporation ,Ganesh Chandra ,Vasanthapalan ,Rathnakumar ,Rudra ,Sakthivel ,Ram Mahendra ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்