×

சியர்ஸ் மியூசிக் இசை ஆல்பத்தில் ஆரி அர்ஜுனன்

சென்னை: சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது. இந்த கிம்ச்சி தோசா இசை வீடியோ ஆல்பம் மூலம் தனது இசை கம்பெனியான சியர்ஸ் மியூசிக் என்ற ஆடியோ லேபிள் நிறுவனத்தை அறிமுகம் செய்கிறது.. இந்த சியர்ஸ் மியூசிக் நிறுவனம் துவங்கியது பற்றி நிறுவனர் அபிலஷா கூறுகையில், ‘‘இசை கலைஞர்களின் கனவுகளை நினைவாகவே இந்நிறுவனம் துவங்கியுள்ளோம். இதன் மூலம் பல புது இசை அமைப்பாளர்கள் பாடகர்கள், பாடலாசிரியர் என திறமையான பலரையும் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழியையும் தாண்டி உலகளவில் மியூசிக் ஆல்பத்தை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த கிம்ச்சி தோசா ஆல்பத்தை இசையமைத்து நடித்தும் இருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தரன். இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு இப்பாடலுக்கு பக்க பலமாக உள்ளது’’ என்றார். ஆரி அர்ஜுனன் முதன்முறையாக இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், இசையமைப்பாளர் தரன், தென்கொரியாவில் புகழ்பெற்ற ஏஏ. பேண்டின் பாடகர் அவுரா, மற்றும் குடும்பஸ்தன் படத்தின் கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளார்.

Tags : Ari Arjunan ,Sears Music ,Chennai ,Sears Entertainment Company ,Vinayagar ,Chaturthi ,Kimchi ,Abilasha ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு