×

ரஜினிக்கு விருது; நடிகர் சங்கம் பாராட்டு

கோவா திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற உள்ள ரஜினிகாந்த்துக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்கு தூணாகவும், வானுயர பேரூன்றி வாழும் ரஜினிகாந்த் அவர்கள் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் விருது பெறப் போகிறார்.

இது குறித்து  தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது. அப்பெருமையை வழங்கிட்ட மத்திய அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...