×

அத்வானிக்கு 95 வயது தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, பாஜ தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜ.வில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் எல்கே அத்வானி. மூத்த தலைவரான அவர், நேற்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கான அவருடைய பங்களிப்பு மகத்தானது.  அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவுத்திறன் காரணமாக நாடு முழுவதும் அவர் மதிக்கப்படுகின்றார். அவர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜ தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்….

The post அத்வானிக்கு 95 வயது தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Advani ,New Delhi ,BJP ,Modi ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...