×

விஷால் நடிக்கும் மகுடம்

சென்னை: அதர்வா முரளியுடன் ஸ்ரீதிவ்யா நடித்த ‘ஈட்டி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் மகிமா நம்பியார் நடித்த ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர், ரவி அரசு. தற்போது அவர் இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது நடிப்பில் உருவாகும் 35வது படம் என்பதும், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் 99வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷால் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மதகஜராஜா’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்துக்கு பிறகு விஷால் நடிக்கும் படத்துக்கு அவர் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘மகுடம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த கதையுடன் படம் உருவாகிறது. கடந்த 1992ல் நடிகர் பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ், பானுப்பிரியா, கவுதமி நடிப்பில் வெளியான ‘மகுடம்’ என்ற படத்துக்கும், தற்போது உருவாகும் படத்துக்கும் தலைப்பு தவிர வேறெந்த தொடர்பும் இல்லை.

Tags : Vishal ,Chennai ,Sridivya ,Adarva Murli ,G. V. Ravi Arasu ,Mahima Nambiar ,Prakash Kumar ,Super Good Films ,Chaudhry ,Dushara Vijayan ,Sunter ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...