×

மீண்டும் இணைந்த அக்‌ஷய், சைஃப் அலிகான்

பிரியதர்ஷன் இயக்கி வரும் ‘ஹைவான்’ என்ற இந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சைஃப் அலிகான் நடிக்கின்றனர். ஊட்டி, மும்பை, கொச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு அக்‌ஷய் குமார், சைஃப் அலிகான் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இதை மட்டுமின்றி தமிழில் ‘ஜன நாயகன்’, பான் இந்தியா அளவில் யஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’, கன்னடத்தில் ‘கேடி’ ஆகிய பிரமாண்ட படங்களை வெங்கட் கே.நாராயணா தயாரித்து வருகிறார். கே.வி.என் புரொடக்‌ஷன்சுடன் தெஸ்பியன் பிலிம்ஸ் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்துள்ளார். இதில் ‘தி டாக்ஸிக்’ படம் மட்டும் ஆங்கிலத்திலும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Akshay ,Saif Ali Khan ,Akshay Kumar ,Priyadarshan ,Ooty ,Mumbai ,Kochi ,Venkat K. ,Yash ,Narayana ,K. V. TESPIAN ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு