×

திரில்லர் படம் இயக்குகிறார் சுரேஷ் சுப்பிரமணியன்

சென்னை: கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார்.

இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி அங்கேயும் படங்களை தயாரித்து வருகிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் கூறும்போது, திருவண்ணாமலையை பின்னனியாக கொண்டு உருவாக்க இருக்கும் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படத்திலே பிரபலமான ஹீரோவை நடிக்க வைக்க உள்ளேன். இந்த படத்தை நான் தயாரித்து, இயக்குகிறேன். இன்னொரு பக்கம் ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்கும் முன் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் ஒரு ஸ்பிரிச்சுவல் ட்ராமா தான், படத்திற்கு ‘ஷார்க்கி’ என டைட்டில் வைத்துள்ளோம் என்றார்.

Tags : Suresh Subramanian ,Chennai ,Raju Jayamohan ,Raghav Mirdath ,Rain of Arrows ,Jai ,Trichy ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்