×

அகிலேஷ் யாதவ்வின் மனைவி எம்.பி டிம்பிள் யாதவ் மீது எனக்கு கிரஷ்: நடிகையின் பேட்டியால் சர்ச்சை

மும்பை: டிம்பிள் யாதவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகக் கூறியும், மனிதர்கள் அனைவரும் இயல்பில் இருபால் உறவாளர்கள் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர். சமீபத்தில், தனது கணவரும், அரசியல்வாதியுமான ஃபஹத் அகமதுடன் இணைந்து பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியான டிம்பிள் யாதவ் (உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மனைவி) மீது ஈர்ப்பு (கிரஷ்) உள்ளது. நாம் அனைவரும் இயல்பில் இருபால் உறவாளர்கள்தான். மனிதர்களை அவர்களது இயல்புக்கு விட்டால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால், மனித இனம் பெருக வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மீது ஒரு கருத்தியலாக ஒருபால் உறவு திணிக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்தக் கருத்துக்களுக்காக சமூக வலைதளத்தில் பலரும் ஸ்வரா பாஸ்கரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags : Akhilesh Yadav ,MP Dimple Yadav ,Mumbai ,Swara Bhaskar ,Dimple Yadav ,Bollywood ,Fahad Ahmed ,Samajwadi Party ,Uttar Pradesh ,Chief Minister ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி