- தெலுங்கு சினிமா வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
- ஹைதெராபாத்
- தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு
- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- ரேவந்த் ரெட்டி
ஐதராபாத்: தெலுங்கு திரையுலக திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, கடந்த 4ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டிரைக் நடந்தது. இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தெலுங்கு படப்பிடிப்புகளை தொடங்க இரு தரப்பிலும் (தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள்) சம்மதித்துள்ளனர். 30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில், 22.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
