×

அர்ஜுனுடன் இணையும் பிரீத்தி முகுந்தன்

சென்னை: ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் ‘ஏஜிஎஸ் 28’ (தற்காலிக தலைப்பு). குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்குகிறார்.

இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார். இப்படம் மூலம் ‘கே.ஜி.எஃப்’ பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.

Tags : Preethi Mukundan ,Arjun ,Chennai ,AGS Entertainment ,Kalpathi S. Agoram ,Kalpathi S. Ganesh ,Kalpathi S. Suresh ,Abhirami ,Subhash K. Raj ,Pradeep Ranganathan ,Arun Radhakrishnan ,Pradeep ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்