×

பேய் கதையில் 8 நிமிட விஆர் மோஷன் காட்சிகள்

சென்னை: ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்க, ஜுன் மோசஸ் இயக்கத்தில் வினோத் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பேய் கதை’. மற்றும் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி.மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே நடித்துள்ளனர் பிரவீன் எஸ்.ஜி ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசை அமைத்துள்ளார். ஜெர்ரி தயாரிக்க, வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வெளியிடுகிறார்.

படம் குறித்து ஜுன் மோசஸ் கூறுகையில், ‘படத்துக்கு ‘பேய் கதை’ என்று தலைப்பு இருந்தாலும், இது முழுநீள பேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கலாம். திரைக்கதையிலும், கதை மற்றும் காட்சிகளிலும் புதுமையை புகுத்தி இருக்கிறோம். 8 நிமிடங்களுக்கு விஆர் மோஷன் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது. தற்போதுள்ள குழந்தைகள் விஆர் மோஷன் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை கவர்ந்திழுப்பதே எங்கள் நோக்கமாகும்’ என்றார்.

Tags : Chennai ,Jerry ,Journey International Production House ,June Moses ,Vinoth ,Aryalakshmi ,Gaana Pallav ,Sukanya ,Ashmelo ,Selva ,Elizabeth Suraj ,G.V. Maha ,Michael ,Sreesumant ,Aashiq Peter ,Rhodes ,Jeevita ,Ruchi Bingley ,Praveen SG ,Bobo Sasi ,Sreethenandal ,Suresh ,Tamil Nadu ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்